428. சுகுணா விலாசம் (அ) சிவப்புச் சாயம் வெளுத்த நரிகள் - BY கி அ அ அனானி
ரொம்ப நாட்களுக்குப் பின் திடீரென்று கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. பதிவொன்றுக்கு எதிர்வினையாக அமைந்துள்ள கி.அ.அ.அ வின் மேட்டரை பதிவு செய்வது அவசியமென்பதால், அவர் எழுதி அனுப்பியதை (முதல் தடவையாக) எடிட் செய்யாமல் அப்படியே தந்திருக்கிறேன்.
இதை பதிப்பிக்கக் காரணம் .... கருத்துச் சுதந்திரம் தான் ! கி.அ.அ.அ பதிவுகளுக்கு விதவிதமாக டிஸ்கி எழுதி எழுதி அலுத்து விட்டதால், இதற்கு NO Disclaimer! அது போலவே, இப்பிரச்சினையில் எனது தனிப்பட்ட கருத்தை முன் வைக்கவும் விருப்பமில்லை, தேவையிருப்பதாகவும் நான் எண்ணவில்லை, அதனால் காலணா பிரயோஜனமும் இல்லை ! Over to கி.அ.அ.அனானி.
எ.அ.பாலா
************************************
முன்னதாக ஒரு "பின்" குறிப்பு : பதிவர் சுகுணா திவாகர் தனது வாயால் மட்டும் சிரிப்பதில்லை ( அவரே சொன்னதுதான்) அதனால்தான் அவர் எழுதும் சில பதிவுகள் அவர் எதாலோ சிரிக்கும் போது வெளிப்படும் நறுமண குணநலன்களைக் கொண்டிருக்கிறதோ என்னமோ.
மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை" "பாப்பார நாய்" என்று வர்ணித்து தனது தரத்தை மேலும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் கொண்டுள்ளார் சுகுணா திவாகர்.. இப்படியாக அடுத்தவரை ஜாதிய சாயம் பூசி திட்டும் இவர்தான் கொஞ்ச நாளைக்கு முன் " பிள்ளைமார் புத்தியை" காட்டிவிட்டாய் என்று யாரோ சொன்னதற்கு குமுறி குமுறி அழுது விட்டு பதிவுலகத்தில் " இன்றே இப்படம் கடைசி" போர்டெல்லாம் மாட்டி ஒப்பாரி ஓலமிட்டு ஓடினார். ( அப்புறம் எதிர்பார்த்த மாதிரியே இவர்களுக்கே உரித்தான கொள்கை தர்மப்படி புறவாசல் வழியாக மீண்டும் பதிவெழுத வந்த "கொள்கைக் குன்று " என்பது தனிக்கதை :) வலுவான எதிர்ப்பு இருக்காது என்பதற்காக வழக்கப்படி பார்ப்பனர்களை மட்டும் ஜாதி சொல்லித் திட்டும் இந்த மாதிரி " போலி ஜாதி எதிர்ப்பிற்கு " பார்ப்பனீயம், வர்ணம், ஜாதி அடுக்கு என்று என்ன 'லாஜிக்' எழவு வேண்டியிருக்கிறது?
இன்னும் (Director) சங்கர் சாகவில்லையே என்று வருத்தமாம்...அது சரி... எல்லோரும் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? எனக்குக் கூடத்தான் "எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்து , அப்பாவி ஏழைகளை ஏமாற்றித் திரியும் போலி கம்யூனிஸ்டுகளின் ஆசன வாயில் சொருக வேண்டும் " என்று ஆசை.நிறைவேறுகிறதா பார்ப்போம்.
எழுத்தாளர் சுஜாதாவின் ஆளுமை மற்றும் தமிழ் எழுத்துலகில் அவரது சாதனைகள் இவைகளைப் பட்டியல் போட்டால் அதில் தேடிப் பிடித்து நொட்டை ,நொள்ளை சொல்லி விவாதிப்பார்களாம்..இப்படி ஒரு பின்னூட்டம் :)ஏற்கனவே சிலர் குறிப்பிட்டுள்ள படி " முன் முடிவுடன்" எழுதுபுவர்களுக்கு பட்டியல் போட்டால் மட்டும் புரிந்து விடவா போகிறது ? முன்னெல்லாம் "ரஷ்யா, சீனா என்று உதாரணம் சொல்லிக் கொண்டு அலைந்தவர்களெல்லாம் அதெல்லாம் காலாவதியாகிப் போன சரக்கானதும் " என்னைத்தவிர எல்லாமே தப்பு " என்ற ஒன் லைனர் சித்தாந்தத்திற்கு மாறி பித்துப் பிடித்து அலையும் அறிவின் நீட்சிதான் குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாத இப்படிப் பட்ட பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல ?
சுஜாதா ,சுரா இன்னும் பிற எழுத்தாளர்களது மேல் இவர்களுக்கு அப்படி என்ன "காண்டு"? வேறொன்றுமில்லை, இந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் மக்கள் படிக்கிறார்கள் ஆனால் இவர்கள் இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையை கசக்கிப் பிழிந்து எழுதும் சிவப்பு பிட் நோடிஸை அங்கங்கே தெரு முனையில் நின்று வினியோகம் செய்யும் கட்சித் தோழர்களே கூட படிப்பதில்லை என்ற பொறாமை பொச்சரிப்புதான்.ஒரு வேளை சுஜாதா ,சுரா போன்றவர்களை வைத்து எழுதினால் இந்த நோட்டீஸுகளை மக்கள் ஓரளவேனும் படிக்கக் கூடும் என்பது என் கருத்து.
தான் சொன்னது சரிதான் என்று நிலை நாட்ட பதிவில் மேலும் ராமராஜன் மற்றும் கே எஸ் ரவிகுமார் போன்றோரின் படங்களை வர்க்க ரீதியாக அளவு பார்த்து தரம் பிரித்து " சித்தாந்த செங்கோலை செங்குத்தாக" நிறுத்தியிருக்கும் காமெடியும் இருக்கிறது.படித்து மகிழலாம்.அடடா..இப்படிப் பட்ட ஆதரவு கிடைக்கும் என்று முன்னமேயே தெரிந்திருந்தால் ராமராஜன் தன் கலைச் சேவையை தொடர்ந்திருக்கக் கூடும்.
மற்றும் ஒரு விஷயம்... தனது திருமணம் பற்றி பறை சாற்றி முன்னம் எழுதிய சுய தப்பட்டக் கொள்கை விளக்கப்பதிவு. அப்பொழுதே அது பற்றி எழுத எத்தனித்து பின் எப்படியாகினும் அது அவரவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதால் மெளனமாக இருந்த, அதே குறைந்த பட்ச நாகரீகத்தை இப்போதும் பின்பற்றி அது பற்றி பேசாமல் விடுகிறேன்.இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ,தனி மனித தாக்குதல்களுக்கும் ,கொள்கைகளைத் தாகுவதற்கும் உள்ள வித்தியாசம் நூலிழைதான்.அதனால் அதை புரிந்து கொண்டு, எழுதும் போதும் பேசும் போதும் கவனமாக கைக் கொள்ள வேண்டும், எழுதுவதும் பேசுவதும் சுஜாதாவை பற்றியதாக இருந்தாலும் சரி,ஜெ மோவாக இருந்தாலும் சரி, சக பதிவராக இருந்தாலும் சரி..இல்லை ராமபிரானாகவோ அல்லது அல்லாவாகவோ இருந்தாலும்.
17 மறுமொழிகள்:
Test !
சபாஷ் சரியான போட்டி !
:)
கி.அ.அ. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார். பலே. :))
சுகுணாவின் அப்பதிவில் அதியமான் அவர்கள் இட்ட இந்தப் பின்னூட்டத்தை அத்ஜு எனது கருத்தாகவும் இருப்பதால் இங்கு நகலெடுத்து ஒட்டுகிறேன்.
////ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய அஞ்சலிக்கட்டுரையில் சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலுக்கு நாடார்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து எழுதும் பகுதியில் 'அதுகள், இதுகள்' என்றே எழுதியிருக்கிறான். ஒரு பார்ப்பார நாய் செத்ததிற்காக இன்னொரு பார்ப்பன நாய் போட்ட அஞ்சலிக் குரைச்சலில் நாடார்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சமத்துவமக்கள் நாயகன்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.////
சுகுணா,
நீங்கள் சுஜாதாவை நாய் என்று வருணிப்பதால் கோபம் அடைந்த அவரின் ரசிகர்கள், கூட்டமாக உங்கள் வீட்டை சூழ்ந்து, இதே போல் கல்லால் தாக்கினால், அந்த கூட்டத்தை நீங்கள் எவ்வாறு வர்ணிப்பீர்கள்? மிகவும் மரியாதையாகவா? ஃபாசிசத்தை நியாப்படுத்த முடியாது.
இங்கு ஜாதி துவேசத்தால் ஜ.ரா. அவ்வாறு எழுதவில்லை. பாஸிஸ்டுகளைதான் அவ்வாறு வர்ணிக்கிறார். ஒரு நாடார் இன நண்பர்தான் அன்று சுஜாதாவை பத்திரமாக பெங்களூர் அனுப்பினார்.
ஆதிக்க வெறி, ஏகாதிபத்தியம் என்றேல்லம் எழுதுவது என்ன வெறும் ஜல்லியடித்தலா அல்லது பின் நவீனத்தவ பாணியா ? :))))//
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுகுணா போன்ற சென்மங்களுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆவணுமா ???
கோவி கண்ணன்
பி எஸ் வீரப்பா மாதிரி வசனம் மட்டும்தானா :)
உங்களைப் போன்றோரது கருத்து முக்கியம் இல்லையா :)
கி அ அ அனானி
டோண்டு ராகவன்
அவருடன் உங்களுக்கு நல்ல அறிமுகம் என்று சொல்கிறார்களே.இதெல்லாம் எடுத்துச் சொல்ல மாட்டீர்களா ?
கி அ அ அனானி
அனானி நண்பரே
தவறென்று நினைக்கும் எதற்கும் எதிர் கருத்தை பதிவது முக்கியம். அது தவறு செய்பவருக்கு தனது தவறை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாகக் கூட அமையலாம் இல்லையா :)
கி அ அ அனானி
quote
///////////கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது/////
நல்லதொரு கருத்து. முன்னால் ஒரு பதிவில் சொல்லப்பட்டது , ஞாபகத்துக்கு வந்தது :)
கி அ அ அனானி
அன்புள்ள தம்பி கி அ அவுக்கு..
அண்ணன் கி ஆ ஆ எழுதிக்கொண்டது.
மிதக்குற வெளி ஜாதியச் சொன்னா கோவம் தாங்காம தெருவெல்லாம் அழுதுகிட்டே போற ஆளு. கண்ணைத் தொடச்சவுடனே தான் பார்ர்ப்பனீயத்தின் ஏகாதிபத்திய சிந்தனாமோகத்தின் கூச்சல்கூடிய வெளிப்பாட்டின் இரைச்சலின் மௌனம் கண்ணுல படுது. (எதுவும் புரிஞ்சுடல இல்லையா?)
யாரைத் திட்டணும், யாரைச் சும்மா விடணும்னு தெளிவா இருக்காங்க - அவங்களைப்போய் குறை சொல்றீங்களே. நாட்டாமை காலை வச்சா ன்னு பாட்டு போடவச்ச ரவிகுமார்தான் தப்பு, சரத்குமாரைத் திட்டமாட்டாங்க, ராமராஜனுக்கு க்ரெடிட்டு, டைரக்டரை விட்டுருவாங்க.. அவங்க செலக்ஷன்லே படம் டைரக்டும் பண்ணாம, நடிக்கவும் நடிக்காத சுஜாதா எப்படி டார்கெட் ஆனாரு? பாப்பார நாய்ன்ற குவாலிபிகேஷன் தானே? அதுக்கு பெருமை இல்ல படணும்? நாளைக்கு எதாச்சும் ஒரு படத்துல சாதிக்கொடுமை பத்தி தப்பா சொன்னா, தேடிப்பாப்பாங்க - அந்த படத்தோட லைட்மேன் பாப்பானா இருந்தா போதும், அவந்தான் அதுக்கு காரணம்!
கதை எழுதறதுல சுசாத்தாவுக்கு அவ்வளவு போதாதுதான். அரிசிக்குள்ளேயே அயோத்தியா மண்டபம் ஒழிஞ்சுருந்துது.. நகரத்துல பாப்பார பாசம் தெரியுதுன்னு அவங்க எடுத்து உடறதுக்குள்ள நீங்களே ஒத்துக்கங்க!
கேனக்கும்பலோட ஒப்புதல் வாக்குமூலம் - இதுக்கெல்லாம் ஒரு பதில்! கி அ அ வோட தரத்தை தாழ்த்திக்காதீங்க!
//உங்களைப் போன்றோரது கருத்து முக்கியம் இல்லையா :)
கி அ அ அனானி//
கருத்து சொல்லலாம், அப்பறம் கந்தசாமியைக் கூப்பிடுவாங்க !
:)
//உங்களைப் போன்றோரது கருத்து முக்கியம் இல்லையா :)
கி அ அ அனானி//
நான் ஏற்கனவே சுஜாதா அவர்களுடன் உறையாடி இருப்பதை என் நண்பர் ரத்னேஷ் பதிவில் நீண்ட பின்னூட்டமாக போட்டு இருக்கிறேன்.
Sreedharan from Doha said..
In his bouncer to Suguna Divakar, Ki.A.A.Anani has once again proved his impeccable manners by choosing words carefully and maintained decency throughout.But,I doubt,it is an effort in vain for a person of Suguna's 'calibre'. When he can't digest somebody citing his caste, and at the same time, criticises a personality like (late) Sujatha menas,he is certainly announcing everybody of his double standards. Readers should identify these type of ' genius' and just ignore him.
Ki.A.A.Anani is too much for suguna's standards and let the former refrain from commenting on these cheap persons.
கி ஆ ஆ அண்ணா
///மிதக்குற வெளி ஜாதியச் சொன்னா கோவம் தாங்காம தெருவெல்லாம் அழுதுகிட்டே போற ஆளு. கண்ணைத் தொடச்சவுடனே தான் பார்ர்ப்பனீயத்தின் ஏகாதிபத்திய சிந்தனாமோகத்தின் கூச்சல்கூடிய வெளிப்பாட்டின் இரைச்சலின் மௌனம் கண்ணுல படுது. (எதுவும் புரிஞ்சுடல இல்லையா?)///
வறுத்து எடுத்துட்டீங்களே அண்ணா, :)
///யாரைத் திட்டணும், யாரைச் சும்மா விடணும்னு தெளிவா இருக்காங்க - அவங்களைப்போய் குறை சொல்றீங்களே. நாட்டாமை காலை வச்சா ன்னு பாட்டு போடவச்ச ரவிகுமார்தான் தப்பு, சரத்குமாரைத் திட்டமாட்டாங்க, ராமராஜனுக்கு க்ரெடிட்டு, டைரக்டரை விட்டுருவாங்க.. அவங்க செலக்ஷன்லே படம் டைரக்டும் பண்ணாம, நடிக்கவும் நடிக்காத சுஜாதா எப்படி டார்கெட் ஆனாரு? பாப்பார நாய்ன்ற குவாலிபிகேஷன் தானே? அதுக்கு பெருமை இல்ல படணும்? நாளைக்கு எதாச்சும் ஒரு படத்துல சாதிக்கொடுமை பத்தி தப்பா சொன்னா, தேடிப்பாப்பாங்க - அந்த படத்தோட லைட்மேன் பாப்பானா இருந்தா போதும், அவந்தான் அதுக்கு காரணம்!///
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க
கி அ அ அனானி
கோவி கண்ணன்
///கருத்து சொல்லலாம், அப்பறம் கந்தசாமியைக் கூப்பிடுவாங்க !
:)///
தெளிவா இருக்கீங்க :)
ரத்தினேஷ் பதிவின் சுட்டியை போட்டு விடுங்களேன்.
கி அ அ அனானி
Sreedharan from Doha
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.
The purpose of the post is as said before
...தவறென்று நினைக்கும் எதற்கும் எதிர் கருத்தை பதிவது முக்கியம். அது தவறு செய்பவருக்கு தனது தவறை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாகக் கூட அமையலாம் இல்லையா ...
கி அ அ அனானி
//
ரத்தினேஷ் பதிவின் சுட்டியை போட்டு விடுங்களேன்.
கி அ அ அனானி//
http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_28.html
Post a Comment